Posts

Showing posts from April, 2022

தடைகள் படிக்கட்டுகளாகட்டும்

தடைகள் படிக்கட்டுகளாகட்டும் உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள்.அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும். எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும். எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது  தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது தன் உற்சாகத்தை இழப்பது இல்லை; நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை. சிறு புல்லைப் பறித்து அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியில் உள்ளே ஆழமாகக் கிளை விட்டு அவை ஊன்றிக் கொண்டு இருக்கின்றன என்று புரியும். உலகில் வாழும் எல்லா உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை. மனிதராகிய நம் குறுகிய மனதில் தான் சலிப்பும், எரிச்சலும், அவநம்பிக்கையின்மையும் ஊற்று எடுக்கின்றன. வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..? எந்த முடிவைக் கண்டும் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்.?முதலில் நாம் சந்தித்தது தோல்வி அல்ல. ஆனால், அதை நினைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக இருப்பது நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ள  வழி வகுக்கும்., ஆம் நண்பர்களே  நம் நோக்கத்தில் தெளி