Posts

Showing posts from May, 2025

பிரார்த்தனை என்பது என்ன?

 பிரார்த்தனை என்பது என்ன? பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல் இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும்.  ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?” என்று கேட்டதற்கு, பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 1. "நிறுத்துவதற்கு" 2. “வேகத்தைக் குறைப்பதற்கு" 3. “மோதலைத் தவிர்ப்பதற்கு " 4. "மெதுவாக செல்வதற்கு" 5. "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடமிருந்து வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். ஆனால் அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம்,  பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்?  நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள்.  தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மன...