Posts

Showing posts from May, 2021

உங்களை நீங்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்

உங்களை நீங்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்...💐💐💐 மனிதம் பற்றிய உளவியல் தகவல் 1. ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம். 2. அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.* 3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம். 4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர். 5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். 6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.  7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம். 8. *மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்தானாம்.*  9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்த

மனம்

உற்சாகத்தில் ஓர் உண்மையான மாயவித்தை உள்ளது.  - நார்மன் வின்சென்ட் பீலே மனம் என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் மைன்ட் (mind) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே மனம், ஏதோ இதய செயல்பாட்டின் ஓர் அங்கம் போலவும், காதல், மன அழுத்தம், மனிதாபிமானம் போன்ற உணர்ச்சிகளும் இதயத்தில்தான் ஏற்படுகின்றன என்பது போலவும் ஒரு தவறான புரிதல்தான் பரவலாக மனிதர்களிடையே இருக்கிறது. இது போன்ற தவறான புரிதல் மூலம் மனம் என்ற வார்த்தை இதயத்தின் உணர்வுகள் என்று நினைக்கப்படுகிறது. ADVERTISEMENT மனம் என்பது உடலில் இருந்து வேறுபட்டதல்ல. உடல் வேறு; மனம் வேறு என்று வரும் ஒரு சில விளக்கங்கள் ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் காலங்காலமாக உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்று மனம் வேறு, உடல் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்று தான் என்ற நிலைக்கு உளவியலும் இன்றைய நவீன மூளை நரம்புமண்டல அறிவியல் துறையும் ( neuroscience), நவீன தத்துவவியலும், பரிணாமவியலும் அழைத்துச் சென்று விட்டது. நம் ஒவ்வொருவரது மூளையிலிருந்தும் மனதைப் பிரிக்க முடியாது என்பதே இன்றைய நிலை. பொதுவாக மனம் என்பது நம் அனுபவங்கள் மூலமும், சமூக தாக்குதல் மூலமும், நம் பரிணாம வளர்ச்

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

*மன அழுத்தத்தை குறைப்பது எப்படி 😗  1) கேட்டாலோழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2) மறக்கவும்... மன்னிக்கவும்... இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3) பாராட்டுக்காக ஏங்காதீர்கள் உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள்