Posts

Showing posts from September, 2025

14 தந்திரங்கள்

 உங்களை அனைவரும் மதிக்க வைக்கும் 14 தந்திரங்கள் 1. குறைவாகப் பேசுங்கள் 2. "இல்லை" என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் 3. விரைவாக பதிலளிக்காதீர்கள் 4. முடிவெடுப்பதற்கு முன் சிந்தியுங்கள் 5. வேலையில் கவனம் செலுத்துங்கள் 6. வாதிடாதீர்கள் 7. அதிக அறிவைக் கொடுக்காதீர்கள் 8. பணக்காரர் ஆகுங்கள் 9. புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் 10. சுத்தமான ஆடைகளை அணியுங்கள் 11. குறைவாக எதிர்வினையாற்றுங்கள் 12. கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள் 13. தீமை செய்யாதீர்கள் 14. அதிகமாக யோசிக்காதீர்கள்

மன அழுத்தம்

 *மன அழுத்தம்* நோய்களில் மிக பெரிய நோய் மன அழுத்தம் மன அழுத்தம் (Stress) என்பது மனதில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை — அது உங்கள் உடல் முழுவதும் இரசாயன மற்றும் உடல் மாற்றங்களை தூண்டுகிறது. கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் அழற்சியை (Inflammation) அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு போன்ற அபாயங்கள் உயரும். அதே நேரத்தில், மன அழுத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ஜீரணக் கோளாறு, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் உயர்வு, மூளை செயல்பாடு குறைவு, மனநிலை மாற்றங்கள், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. நீண்ட காலமாக இருந்தால், சருமம், முடி, தூக்கம், பாலியல் ஆரோக்கியம் போன்ற பல அம்சங்களையும் பாதிக்கும். மொத்தத்தில், மன அழுத்தம் உங்கள் உடலின் பெரும்பாலான அமைப்புகளை பாதிக்கக்கூடியது, ஆகவே அதை கட்டுப்படுத்துவது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் முக்கியம்... மன அழுத்தத்தை போக்க தியானம் செய்யவும் கோவில், சித்தர்கள் ஜீவ சமாதி, இயற்கை சூழ்நிலை மரம் செடி நீர் உள்ள பகுதியில் 10-15 ...

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள்.

 உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் உண்மை. அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும். அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக, இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இ...

சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்

 ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. "அற்புதம்" என்றார் மேலாளர்... "இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம்" என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர். முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல் கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்.. காரை கஷ்டப்பட்டு இதே வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவ...