மன அழுத்தம்
*மன அழுத்தம்*
நோய்களில் மிக பெரிய நோய் மன அழுத்தம்
மன அழுத்தம் (Stress) என்பது மனதில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை — அது உங்கள் உடல் முழுவதும் இரசாயன மற்றும் உடல் மாற்றங்களை தூண்டுகிறது. கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் அழற்சியை (Inflammation) அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு போன்ற அபாயங்கள் உயரும்.
அதே நேரத்தில், மன அழுத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ஜீரணக் கோளாறு, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் உயர்வு, மூளை செயல்பாடு குறைவு, மனநிலை மாற்றங்கள், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. நீண்ட காலமாக இருந்தால், சருமம், முடி, தூக்கம், பாலியல் ஆரோக்கியம் போன்ற பல அம்சங்களையும் பாதிக்கும்.
மொத்தத்தில், மன அழுத்தம் உங்கள் உடலின் பெரும்பாலான அமைப்புகளை பாதிக்கக்கூடியது, ஆகவே அதை கட்டுப்படுத்துவது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் முக்கியம்...
மன அழுத்தத்தை போக்க
தியானம் செய்யவும்
கோவில்,
சித்தர்கள் ஜீவ சமாதி,
இயற்கை சூழ்நிலை
மரம் செடி நீர் உள்ள பகுதியில் 10-15 நிமிடங்கள்
*உங்களுக்கு பிடித்த வேலை அல்லது தொழிலை செய்து வரவும்*
நேர்மறை எண்ணத்தோடு இருங்கள்
பிடித்த உணவு
பிடித்த உடை
பிடித்த இருப்பிடம்
இதில் கவனம் செலுத்தவும்
உங்களுக்கு பிடித்த இசை பாடல்கள் நடனம் இதில் உங்களுக்கு முடிந்த நேரத்தை செலவிடவும்.
நகைசுவை காட்சிகள் அவ்வப்போது பார்த்து மனதை குதுகலமாக வைத்து கொள்ளவும்.
மனதுக்கு பிடித்தவர்களிடம் மனதில் இருப்பதை பகிர்ந்து வரவும்.
அனைவரிடமும் அன்பு செலுத்தவும்.
பிராணிகளிக்கு உணவு அளித்து வரவும்
மனதுக்கு பிடித்ததை செய்யவும்.
*உங்கள் வாழ்க்கையை. உங்களுக்காக வாழுங்கள்*
*🍃Sri Yoga & Naturopathy*🍃
*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*
Comments
Post a Comment