உற்சாகத்தில் ஓர் உண்மையான மாயவித்தை உள்ளது. - நார்மன் வின்சென்ட் பீலே மனம் என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் மைன்ட் (mind) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே மனம், ஏதோ இதய செயல்பாட்டின் ஓர் அங்கம் போலவும், காதல், மன அழுத்தம், மனிதாபிமானம் போன்ற உணர்ச்சிகளும் இதயத்தில்தான் ஏற்படுகின்றன என்பது போலவும் ஒரு தவறான புரிதல்தான் பரவலாக மனிதர்களிடையே இருக்கிறது. இது போன்ற தவறான புரிதல் மூலம் மனம் என்ற வார்த்தை இதயத்தின் உணர்வுகள் என்று நினைக்கப்படுகிறது. ADVERTISEMENT மனம் என்பது உடலில் இருந்து வேறுபட்டதல்ல. உடல் வேறு; மனம் வேறு என்று வரும் ஒரு சில விளக்கங்கள் ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் காலங்காலமாக உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்று மனம் வேறு, உடல் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்று தான் என்ற நிலைக்கு உளவியலும் இன்றைய நவீன மூளை நரம்புமண்டல அறிவியல் துறையும் ( neuroscience), நவீன தத்துவவியலும், பரிணாமவியலும் அழைத்துச் சென்று விட்டது. நம் ஒவ்வொருவரது மூளையிலிருந்தும் மனதைப் பிரிக்க முடியாது என்பதே இன்றைய நிலை. பொதுவாக மனம் என்பது நம் அனுபவங்கள் மூலமும், சமூக தாக்குதல் மூலமும், நம் பரிணாம வள...